பெருங்களத்தூர் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்தாம்பரம் மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் காவல்துறையினர் பணியில் இல்லாததால் பேருந்து நடத்துனர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிகப்படியான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ரயில் ரத்து காரணமாக தனது சொந்த வாகனத்திலும் பயணித்து வருவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை பேருந்து நிலையம் மேம்பாலம் என அனைத்து பகுதிகளிலும் வாகனம் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லாத நிலையில் வாகனங்கள் நகர முடியாத நிலையில் சிக்கி தவித்து வருகின்றன அந்த வழியாக வந்த வானகரம் பேருந்து நடத்துனர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்து பயணித்து வருகின்றனர்.பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் சாலை முடிச்சூரில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் சாலை வேளச்சேரியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் சாலை என அனைத்து பகுதியில் இருந்தும் சந்திக்கும் தாம்பரம் மேம்பாலத்தில் நீண்ட நேரமாக கடும் போக்குவரத்தின நெரிசல் நீடித்து வருகிறது.
