மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று உலக சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிட்டப்பா அங்காடியில் இருந்து துவங்கிய பேரணி, நகர பூங்காவில் நிறைவடைந்தது. அங்கு ராமாமிர்தம் அம்மையார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர்.
