கரூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கரூரில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக கழகம் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடிய சேர்த்து துவக்கி வைத்தார்.
கரூர், திருச்சி, கோவை, சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டனர். பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டிற்கு பத்து மைல் தூரமும், நடு மாட்டிற்கு எட்டு மைல் தூரமும், சிறய மாட்டிற்கு ஆறு மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியினை காண அப்பகுதி மக்கள் சீறிப்பாய்ந்த காளைகளை பார்த்து ஆர்வத்தோடு கண்டு ரசித்தினர்.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்க பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிறந்த காளைக்கான பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.








