கரூர் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு பூஜைகள்.
கரூர் மாநகர் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று 10,11,12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறப்பு மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பள்ளி மாணவ,மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை ஸ்ரீ கற்பக விநாயகருக்கு முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபம் காண்பிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஹோமம் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.








