• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ByKalamegam Viswanathan

Feb 15, 2025

அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரிய ஊர்சேரி ஆதனூர் தேவசேரி முடுவார் பட்டி ஆகிய பகுதிகளில் கிளை கழகங்கள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு கிளைக்கழகங்களிலும் பூத் வாரியாக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழக முதல்வராக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏக்கள் எம். வி. கருப்பையா மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜா, அம்மா பேரவை ராஜேஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி, திருமங்கலம் திருப்பதி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், கலை பிரிவு சிவசக்தி, நிர்வாகிகள் விவசாய அணி வாவிடமருதூர் குமார், முடுவார்பட்டி ஜெயச்சந்திரன், மணியன், முத்து கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, அலங்காநல்லூர் ராகவன், நாட்டாமை சுந்தர் ராகவன், குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், கோட்டைமேடு பாலா சிங்க ராஜா, சோழவந்தான் பேட்டை 1வது வார்டு நிர்வாகிகள் முத்துக்குமார், கிரில் மாரி ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.