காதலர் தினத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!!
பிப்ரவரி 14 ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதி இன்றி கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர் தினம் கொண்டாட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் அனுமதியின்றி, கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாட முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர்கள் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் போது காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
