• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

Byமதி

Nov 25, 2021

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது.

மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கண்காணிப்பு இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி உள்பட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.