• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

ByKalamegam Viswanathan

Jan 29, 2025

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றரை கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் என அமல்படுத்தப் போகிறோம். மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் ஆன்லைன் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையது ஹனிபா கூறுகையில்:

கடந்த 2013 ஆம் ஆண்டு மீட்டர் மூலம் கிலோமீட்டருக்கு ஒரு தொகையை அரசு நிர்ணயித்தது. அதன் பிறகு தற்போது வரை அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. இது தொடர்பாக பல கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்திய அரசு செவிசாய்க்கவில்லை அதனால் அனைத்து சங்கங்கள் கூடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என ஒரு மீட்டர் தொகையை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த நிர்ணயத் தொகையை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம் அதன்படி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றரை கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் என அமல்படுத்தப் போகிறோம்.

அரசு நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு:

பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பெட்ரோல், டீசல் என அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. ஆனால் எங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அரசு நிர்ணயம் செய்திருந்தால் அந்த விலைக்கு நாங்கள் கட்டப்பட்டிருப்போம் அவர்கள் செய்யாததால் நாங்களே நிர்ணயித்துள்ளோம்.

மதுரையில் மட்டுமா? இல்லை தமிழக முழுவதுமா என்ற கேள்விக்கு:

தமிழகத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் மூலமாக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நிர்ணயம் செய்ததை மதுரையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் நடைமுறைப்படுத்தப் போகிறோம்.

பொதுமக்கள் வரவேற்பு குறித்த கேள்விக்கு:

இன்றைய சூழலில் கார்ப்பரேட் கம்பெனிகள் எங்களிடம் காசு வாங்குகிறார்கள், பொதுமக்களிடமும் காசு வாங்குகிறார்கள். அதை மாற்றுவதற்காக தான் நாங்கள் ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என வைத்து அவர்களை விட குறைவாக வாங்கி வருகிறோம். அதை வரவேற்பது போல இதையும் மக்கள் வரவேற்பார்கள்.

இந்தக் கட்டணத்தில் மீண்டும் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு:

இது தற்போதைக்கு நிலையான வாடகை தான்.

காவல்துறை அபராதம் விதிப்பது குறித்த கேள்விக்கு:

காவல்துறை அபராதம் விதிப்பது கண்டிக்க கூடிய செயலாக உள்ளது. ஒருவரை சோதனை செய்து அவரிடம் ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டும், ஆனால் காவல்துறையினர் சோதனையை செய்யாமல் சாலையில் செல்கின்ற ஆட்டோக்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிப்பது வன்மையாக கண்டிக்கக் கூடியது.

பைட் டாக்ஸி குறித்து கோரிக்கை வைத்தோம் ஆனால் மத்திய அரசு வழிகாட்டுதலுடன் நடைபெறுகிறது என மாநில அரசு சொல்கிறது. எனவே இதற்காக தமிழக அரசு மீது நாங்கள் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். பைக் taxi என்பது தனிநபர் பயன்பாடாக இல்லாமல் வணிகப் பயன்பாடாக உள்ளது மத்திய அரசின் பல திட்டங்களை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக நாங்கள் வெறும் ஆட்டோ காரர்கள் என்பதால் இதை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.