• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோரிக்கை விண்ணப்பங்கள் புறக்கணிப்பு… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

Byகுமார்

Nov 23, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வருவாய் அலுவலகம் முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசாணை 41ன் படி 40 சதவீதம் ஊனம் இருந்தாலும் மாற்றத்தினாளிக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், மாற்றுத்தினாளிகளை அலைகழிக்கக்கூடாது, கோட்டாட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தி அடையாள அட்டை, உதவி தொகை மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும், மாற்றுத் திறனாளிகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் AAY அட்டையாக மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.