• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி…

எதிர்கட்சிகள் ஈரோடு இடைத் தேர்தலை புறக்கணித்தது ஏன்.? நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம்.

கன்னியாகுமரி அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக வந்த நடிகை காயத்ரி ரகுராம் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாவது,

கன்னியாகுமரி மாவட்டம் தேசிய அரசியலும், மாநில அரசியலும் அறிந்த ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தில் அரசியல் புரிதல் மிக அதிகமாக உள்ளது. ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு மாவட்டம். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் வரம்.
2026 சட்டமன்ற தேர்தல் வருகிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அனைத்து அதிகாரம் பலம், பண பலம் எல்லாம் அவர்களிடம் இருப்பதினால் கடந்த முறை ஈரோடு இடைத்தேர்தலில் நடந்தது போல்தான். இந்த முறையும் நடக்கும். அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதில்லை முடிவு எடுத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என அறிவித்திருக்கிறார்கள். அதற்கிடையில் இடைத்தேர்தல் தேவையில்லை. திமுக எப்போதும் மக்களுக்கு நல்லது செய்யப்போவதில்லை.

பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் தம்மை எதற்காக அடித்தார் என்றால் எதற்காக என்பதை அவரைத்தான் கேட்க வேண்டும். அவர் செய்வது எல்லாமே டிராமா தான். அண்ணாமலை எப்போதுமே அவர் சொல்லுகின்ற வார்த்தையில் நிலைத்து நிற்க மாட்டார். அவரிடம் உண்மை இருக்காது. அவர் சாட்டையால் அடித்துக் கொண்டது ஒரு டிராமா என்பது தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். அவருடைய டிராமாவெல்லாம் இன்னும் தமிழகத்தில் எடுபடாது.

2026 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து எடப்பாடியார் முதலமைச்சராக பதவி ஏற்பார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மக்கள் வரவேற்கிறார்கள். நானும் வரவேற்கிறேன். அரசியலில் எல்லோரும் வரலாம். அரசியல் ஆர்வம் அவருக்கு இருக்கிறது. அவர் தன்னை நிரூபித்துக் கொள்ள நிறைய உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மக்களை பாதிக்க கூடிய எவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக விஷயமாக இருக்கட்டும், பொங்கல் பரிசு பணம் கொடுக்காத விஷயம் உட்பட மாநில அரசு அரசு செயல்பாடு முற்றிலும் மிகவும் மோசமாக உள்ளது.

பெரியாரைப் பற்றி சீமான் பேசியது கண்டிக்கத்தக்க விஷயம். அவர்கள் வாழ்ந்து வழிகாட்டி எத்தனையோ விஷயங்களை சொல்லி விட்டு போயிருக்கிறார்கள். பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் இருக்க வேண்டும் இந்த தமிழ்நாடு அரசியல் ரீதியாக ஒரு நல்ல இடத்தில் இருப்பதற்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் காரணம். இந்த நேரத்தில் பெரியாரைப் பற்றி பேசுவது தவறான விஷயம். இன்றைக்கு தமிழகம் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது தந்தை பெரியார் பற்றி பேசுவது பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசுவது தவிர்க்க வேண்டும். இது போன்ற திசை திருப்பல் அரசியல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.