குமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர்.இரா.ஸ்டாலின் கடந்த 4_ம் தேதி பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 6_ம் தேதி செய்தியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார்.
குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் போதைப் பொருட்கள் தடை, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் கொட்டுவதற்கு கொண்டு வரும் மருத்துவ மற்றும் கோழி கழிவுகளை கொண்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர்களை கைது செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து இரவு 11_மணிக்கு மேல் எந்த உணவு விடுதிகள், சாலை ஓர தள்ளு வண்டிகள், சிறு பெட்டிக்கடைகள், டீ கடை எதுவும் திறந்திருக்க கூடாது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க, குமரி மக்கள் காவல்துறையுடன் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஒரு பொதுவான அவரது நடவடிக்கைகள் குறித்த கருத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை, குமரி மாவட்டத்தில் எந்த பகுதியிலும் இரவு 11_மணிக்குப்பின் எத்தகைய உணவு விடுதிகளும் திறக்க கூடாது. இரவு 11_மணிக்கு மேல் திறந்திருக்கும் எந்த விதமான உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதிய மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர்.இரா. ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து. தமிழக வியாபாரிகள் சங்கம் மாநில செயலாளர் டேவிட்சன்(முன்னாள் நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் ஹெலனின் கணவர்) மற்றும் உறுப்பினர்கள் தம்பி தங்கம், மைக்கேல், ஜெகன் ஆகியோர் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள், மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளரை நேரில் பூங்கொத்து கொடுத்து அறிமுகம் செய்து கொண்டு வைத்த கோரிக்கை.

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. கால நேரம் இல்லாது சர்வதேச சுற்றுலா பயணிகள் வரும் பகுதி என்பதாலும், சுற்றுலா பயணிகளை நம்பிய வாழ்வை கொண்டுள்ள உணவு விடுதி நடத்துபவர்கள், அங்குள்ள பணியாளர்கள் வாழ்வாதாரம் இருப்பதை கருத்தில் கொண்டும், சர்வதேச சுற்றுலா பயணிகளின் நலம் கருதியும். கன்னியாகுமரியின் முகப்பு பகுதியான விவேகானந்தாபுரம் முதல் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் உள்ள அனைத்து வகையான கடைகளையும் இரவு நேரத்தில் இப்போது போல் திறந்து வைக்க காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு அனுமதி நல்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்த நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் மூன்று தினங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், கன்னியாகுமரியில் உணவு விடுதி நடத்துபுவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
