• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

BySeenu

Jan 9, 2025

பர்மிட் என்றி தமிழக எல்லைக்குள் வந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா ஆம்னி பேருந்து சிறை பிடிப்பு தமிழக ஆம்னி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சிறை பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது..,

கேரளாவில் இருந்து உரிய பர்மிட் இல்லாமல் தமிழக எல்லைக்குள் வந்து இங்கு இருக்கும் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதை கேரளா ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். அதேபோல இன்று கடந்த 30 ஆம் தேதிக்கு கேரளாவில் இருந்து மேல் மருவத்தூர் செல்வதற்காக ஒரு வழி பயணத்திற்கு பர்மிட் எடுத்த பேருந்தை இங்கு கொண்டு வந்து கோவையில் இருந்து ஐயப்ப பக்தர்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதை நாங்கள் தடுத்து நிறுத்தி ஆர்.டி.ஓ விடம் கொண்டு சென்று முறையிட்டோம் ஆனால் தற்போது வரை எந்தவித அபராத தொகையும் விதிக்கப்படவில்லை இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. எனவே முறையாக அனுமதி இன்றி இதுபோன்று வரும் கேரளா வாகனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். மேலும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இது மட்டும் அல்ல எல்லா பண்டிகை காலங்களிலும் இதே போன்று தான் கேரளாவை சேர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். எனவே இதனை தடுத்து நிறுத்தா விட்டால் பெரிய பிரச்சனை ஏற்படும் எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகும். எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தனர்.

தமிழக கேரளாவின் மிக முக்கிய சாலையான வாளையார் அருகே கேரளா ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்களால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.