கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு..!
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் B.A., B.L., அறிக்கை
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கு 30.12.2024, திங்கட்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட மகாதானபுரம் ரவுண்டானாவில் வைத்து மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஆகவே, இந்த வரவேற்பு நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகரபகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், 30.12.2024, திங்கட்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூபாய் 37 கோடி செலவில் அமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் மாலை 7.00 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. 31.12.2024, செவ்வாய்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டி, திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேருரையாற்றுகிறார் மற்றும் காலை 11.30 மணிக்கு மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் தொடங்குகிறது.அதன்பின்பு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஆகவே, மேற்படி நாட்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கில் கழகத் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.