• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயம்

ByP.Thangapandi

Dec 16, 2024

செக்காணூரணி அருகே அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயமடைந்த சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நமச்சிவாயம். இவர் கடந்த 9ஆம் தேதி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது அங்கு சுற்றித்திரிந்த நாய் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நாயின் காலில் காயம் ஏற்பட்டு துடிதுடித்த நிலையில் இதை கண்டு கொள்ளாமலும், உரிய சிகிச்சை அளிக்காமலும், அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுவிட்டதாக சோழவந்தானைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்ற வழக்கறிஞர் போக்குவரத்துத்துறை மதுரை மண்டல பொது மேலாளருக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் செக்காணூரணி பணிமனையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் நமச்சிவாயத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல பொது மேலாளர் மணி உத்தரவிட்டார்.

நாய் மீது அரசு பேருந்து மோதிய சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.