• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

BySeenu

Dec 4, 2024

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களுடன் கூடிய திரைப்பட கல்லூரி கோவை அருகே துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.

முன்னனி ஐ.டி.மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திரைப்படம் மற்றும் அது தொடர்பான ஊடக தொழில் நுட்ப ஸ்டுடியோக்களும் புதிதாக துவங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் ஊடகத்துறை தொடர்பான அதி நவீன தொழில் நுட்பங்கள் தொடர்பான பாடத்திட்டங்களுடன் கோவை அருகே அஹலியா குழுமங்கள் சார்பாக புதிய திரைப்படக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.

கேரள- தமிழக எல்லை பகுதி அருகே உள்ள கோழிப்பாறை எனும் பகுதியில் இந்தியாவின் பெரிய ரெசிடென்ஷியல் திரைப்படப் பயிற்சிக் கல்லூரியாக துவங்கப்பட்டுள்ள கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் அகலியா கல்வி நிறுவனங்களின் கல்விச் செயல்பாட்டுத்துறையின் துணைத் தலைவரான ரஜிதன், ஒலி வடிவமைப்பாளர் மற்றும் திரைப்படக் கல்வியாளர் வினோத் சிவராம்,ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

முன்னணி சினிமா மற்றும் பொழுதுபோக்கு தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த திரைப்பட கல்லூரி துவங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஐந்து பாடத்திட்டங்களுடன், அதற்கான சேர்க்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக தூய்மையான ஏரிகள், வயல்வெளிகள், புல்வெளிகள், காற்றாலைகள், கேரளாவின் மிகப்பெரிய சிற்பப் பூங்கா, விலங்கினங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலை என இயற்கை மிகுந்த சூழலில் திரைப்படக் கல்லூரியும் துவங்கப்பட்டுள்ளதால், இங்கு பயிலும் மாணவர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் படங்களை எடுப்பதற்கான அனைத்து விதமான லொகேஷன் மற்றும் தொழில் வசதிகள் இங்கு இருப்பதாக தெரிவித்தனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திரைப்படம் தொடர்பான கலைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற திரைப்பட கல்லூரிகள் வளரும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.