அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி அளித்தார்.
நாகர்கோவிலில் இன்றும், நாளையும்(30_ ஜனவரி01) நடைபெறும். குமரி மாவட்ட 24வது மாநாட்டில் மாநில உரிமை பறிப்பு, வேலையின்மை, மதத்தின் அடிப்படையில் தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தெரிவித்தார்.

கனகராஜ் தொடர்ந்து தெரிவித்தவைகள்.
அதானி மீதான ஊழல் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதானியை காப்பாற்ற பிரதமர் முயல்கிறார்.
இரண்டு நாள் நடைபெறும் கன்னியாகுமரி மாவட்ட மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி வளர்ச்சி,இளைஞர்கள், மாணவர்கள் (இருபாலர் களை)இயக்கத்திற்கு ஈற்பது, கன்னியாகுமரி மாவட்டத்தின் 24_ வது ஆண்டு விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகள். சி.பி.இளக்கோ போன்ற மூத்த முன்னோடிகளின் தியாகத்தை என்றும் போற்றுவது. வாழும் முன்னோடிகளின் பணியை பாராட்டி போற்றுவது, அவர்களை கெளரவப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.