• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய மாணவர் படை தினவிழா

ByKalamegam Viswanathan

Nov 26, 2024

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா நடைபெற்றது. அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் துவக்க உரையாற்றினார்.

அவர் பேசுகையில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தரைப்படை பிரிவு 100 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒழுக்கமும், ஒற்றுமையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தேசிய மாணவர் படை இயங்கி வருகிறது என்று கூறினார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், பள்ளிகளில் தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் குறித்தும், ஒழுக்கம் மற்றும், தலைமைத்துவத்தை மாணவர்களிடத்தில் வளர்ப்பதில் என்சிசி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தேசிய மாணவர் படையில் இணைந்திருக்கும் மாணவர்கள் சமூக சேவையிலும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஏ, பி, சி சான்றிதழ்கள் குறித்தும், என்சிசி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை குறித்தும் எடுத்துரைத்தார்.

உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி பிற ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.