மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மகா காளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை தேவதா அணுக்கை பூஜை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை பஞ்சகவிய பூஜை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

பின்னர் ஸ்தாபனம் கும்ப அலங்காரம் கலா கரிசனம் யாகசாலை எழுந்தருளல் முதல் கால வேள்வி பூஜை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரண்டாவது நாளாக திருமுறை பாராயணம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மகா பூரணாஹீதி கடம் புடிப்பாடுடன் கும்பாபிஷேகம் .
பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அய்வைத்தனேந்தல் அகமுடையார் கல்யாண மஹாலில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் அம்பேத்கர் நகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)