• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்

Byஜெ.துரை

Nov 15, 2024

சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும் – இயக்குநர் N.ராஜசேகர்!

‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியவர் N.ராஜசேகர் இந்த படத்தை ரொமாண்டிக் பீல் குட் படமாக இயக்கியுள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் N. ராஜசேகர்.

“’லவ் யூ’ வை விட ‘மிஸ் யூ’ என்கிற வார்த்தையில் தான் ரொம்பவே லவ் இருக்கிறதால் தான் அந்த டைட்டிலை வைத்துள்ளோம். யாருமே தங்களுக்கு பிடித்த பெண்ணைத் தான் லவ் பண்ணுவார்கள். இதில் நாயகன் தனக்கு பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார். இந்த ஒரு லைன் தான் சித்தார்த்தை இம்ப்ரஸ் பண்ணி இந்த படத்திற்குள் அழைத்து வந்தது. எப்படி பிடிக்காத பெண்ணை ஒருவன் லவ் பண்ணுகிறான். அவளுக்கு அது தெரிந்திருந்தும் எப்படி கன்வின்ஸ் பண்ணுகிறான் என்பதற்கு பொருத்தமான காரணத்துடன் தான் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் இந்த கதையை உருவாக்கியுள்ளேன். நிச்சயம் இந்த படத்தின் கதை தனித்தன்மையுடன் இருக்கும்.

சித்தார்த் சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்யும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் இளமை துள்ளலுடன் காதல் நாயகனாக இப்படத்தில் களமிறங்குகிறார் சித்தார்த். தெலுங்கில் சித்தார்த் நிறைய லவ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இது போன்ற ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. வழக்கமாக செய்து வந்த ஒன்றை நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் செய்யும்போது அதுவே வித்தியாசமாக தான் இருக்கும். அந்த வகையில் அவருக்கு இது வித்தியாசமான படம் தான். இது ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் படம்.

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். படம் பார்த்த அனைவருமே ஆஷிகா ரங்கநாத் புதுமுகம் என்று தெரியாதபடி இந்த படத்துக்கு ஒரு பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார் என்று பாராட்டினார்கள்.

இதில் மொத்தம் எட்டு பாடல்கள். ஆறு முழு நீள பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை சித்தார்த் பாடியுள்ளார். சித்தார்த் பாடிய “நீ என்ன பார்த்தியா..” மற்றும் “சொன்னாரு நைனா” பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

எழில் சாரிடம் மனம் கொத்தி பறவை படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தேசிங்கு ராஜாவில் வசனம் எழுதியுள்ளேன். மனம் கொத்தி பறவை முடிந்த சமயத்தில் நான் இயக்குனராகும் அளவிற்கு தயாராகி இருக்கவில்லை. அப்படி தயாராகி வந்தபோது சிவகார்த்திகேயன் பெரிய இடத்திற்கு போய்விட்டார். இருந்தாலும் அவரிடம் கதை சொல்ல முயற்சித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.