• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவுன்சிலரைக் காணோம் கண்டா வரச் சொல்லுங்க – பொதுமக்கள் சாலை மறியல்

ByKalamegam Viswanathan

Nov 13, 2024

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 71 வது வார்டு வி. கே. பி நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்த பொழுது வார்டு முனியாண்டி அவனியாபுரம் பகுதியில் சேர்ந்தவர் விடுதலை சிறுத்தை கட்சியே சார்ந்த இவர் கவுன்சிலர் எலக்சன் பொழுது வாக்கு சேகரிப்பு கடைசி நாள் அன்று வேட்பாளரை நாங்கள் பார்த்ததாகவும் யார் என இதுவரை எங்களுக்கு தெரியவில்லை எனவும், இதுவரை ஜெயித்ததிலிருந்து தொகுதி பக்கமே வரவில்லை எனவும், மேலும் சாலை வசதிகள் சரியில்லை சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் குடிநீர் வசதி இல்லை எனவும், குப்பை வாகனம் வரவில்லை மழைக்காலங்களில் அவசர கால ஊர்திகள் கூட செல்ல முடியாமல் பள்ளத்தில் மாட்டிக் கொள்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

மேலும் பலமுறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டன. சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.எஸ். காலனி போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அப்பகுதிக்கு விரைந்து வந்த மாநகராட்சி துணை ஆணையாளர் மற்றும் வார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் பொறியாளர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இப்பகுதியில் கவுன்சிலர் கண்டா வரச் சொல்லுங்கள் எனவும், தேர்தல் வாக்குப்பதிவு கடைசி நாள் அன்று பார்த்தது யார் என்று எங்களுக்கே மறந்து விட்டது என்று குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மாடக்குளம் பிரதான சாலையில் போக்குவரத்து ஆனது பாதிக்கப்பட்டது.