• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசு

BySeenu

Oct 29, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,44 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு ஜி.எம்.பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாடைகள்,இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக,தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.முருகன் மற்றும் நிர்வாகிகள் கல்பனா செந்தில் குமார்,
வேலாண்டிபாளையம் பகுதி செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் ஷ்யாம், சிவபாலன், லட்சுமணன், சிவக்குமார், நரேஷ், விக்னேஷ் அரவிந்த், அன்புராஜ் உட்பட 42,43,44 வது வட்ட நிர்வாகிகள், சுற்றுச்சூழல், வர்த்தக அணி மகளிர் அணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.