• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகை ஆதரவற்ற மாணவர்கள் மகிழ்ச்சி

BySeenu

Oct 29, 2024

கோவை பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஆதரவற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது. சமூக மற்றும் பொருளாதாரப் ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இந்த இல்லத்தில் ஆதரவற்ற மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பி.எஸ்.ஜி.அறக்கட்டளை நிர்வாகிகள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில், முன்னதாக மாணவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது.. பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்ற ,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்ததோடு தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்லூரி இயக்குனர், முனைவர் ஸ்ரீவித்யா, பி.எஸ்.ஜி.கேர் இயக்குனர் முனைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் பேசினர்.
சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடந்த 1995-ம் ஆண்டு இந்த இல்லத்தில் தற்போது 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருவதாகவும், ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி செயல்படும் இதில்,ஆரம்ப கல்வி முதல், பாலிடெக்னிக் கல்லூரி, கலை
மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி என பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் திறமையான மற்றும் தகுதியான மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கை வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் இணைந்து கோவையை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர், பி.எஸ்.ஜி.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமான பேர் நட்பு மற்றும் கலாச்சார ஒற்றுமையுடன் கலந்து கொண்டது.