• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆக்ரோஷமாக வாளை சுழற்றிய மாணவிகள்

BySeenu

Oct 21, 2024

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்க உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஏராளமான மாணவ – மாணவியர் ஆர்முடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள், அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.