• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

Byகாயத்ரி

Nov 17, 2021

கொலம்பியாவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியின் ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆனந்த் வேல்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். நேற்று அவர் சென்னை திரும்பினார். அவருடன் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வந்தனர்.


சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில், வீரர், வீராங்கனைகளுக்கு, பூச்செண்டு, பொன்னாடை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சாமுவேல் ராஜா டேனியல், முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
வெள்ளிப் பதக்கம் வென்ற ஆனந்த் வேல்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வெற்றி வீரர் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.