உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். தொடர்ந்து கோவிலின் அம்மன் சன்னதி வழியாக சென்று மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.


