அதிமுக சார்பில் சிக்கந்தர் சாவடியில், செயல் வீரர்கள் வீராங்கனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சிக்கந்தர் சாவடி தனியார் மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதா
கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், தமிழரசன், எஸ். எஸ் .சரவணன், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா,பேரூர் செயலாளர்கள் அசோக், முருகேசன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார், மகளிர் அணி மாநில இணைச்செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிர்வாகிகள் துரை தனராஜ் வக்கீல் திருப்பதி, தமிழ்செல்வன், வெற்றிவேல், பஞ்சவர்ணம், லட்சுமி, வனிதா, ரகு விஜய பாண்டி, சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலையாளம் உள்பட மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், பொதும்புராகுல் நன்றி கூறினார்.
அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
