வட இந்திய பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் தமிழுக்கு முந்தைய நாகரிகம் இருந்துள்ளது எழுத்து மற்றும் வடிவங்கள் இல்லாததால் அவை தமிழோடு தொடர்புடைய முந்தைய நாகரிகமாக கருதப்படுகிறது என அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 31 வது வரலாற்று பேரவையின் சார்பில் 2ம் நாளான இன்று வரலாற்றில் தொல்லியல் பங்கு என்ற நிகழ்வு நடைபெற்றது.
வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் உமா வரவேற்புரையுடன் சென்னை பல்கலை கழக தொல்லியல் துறை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சங்கால வரலாற்றில் கீழடியின் அகழராய்ச்சியில் சங்க கால தொடர்புகள் சிந்துசமவெளியில் அகழாய்வில் சிந்து கலாச்சார தொடர்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.
பின்னர் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறுகையில்
கீழடி அகழாய்வில் சிலைகள் கிடைத்ததா ?
சிலை வழிபாடு என்பது கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்தது. சிலை வழிபாட்டிற்கு முன்னால் இருந்த நாகரிகம் என்பதால் கீழடியில் சிலைகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
அப்படியே அங்கு கிடைத்தாலும் அது கிபி மூன்றாவது நூற்றாண்டுக்கு பிந்தைய காலமாக தான் இருக்கும். சங்ககாலத்தில் இருந்த வழிபாட்டு முறை பெண் தெய்வ வழிபாட்டு முறை, இயற்கை வழிபாட்டு முறை தான் இருந்தது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
தமிழை விட தொன்மையான மொழி உள்ளதா என்ற கேள்விக்கு:
தமிழ் தான் பழமையான மொழி என்பது எழுத்து கிடைத்தால்தான் நாம் உறுதி செய்ய முடியும். தமிழ் மொழிக்கான எழுத்துக்கள் கிடைப்பதால் தமிழ் மொழியை சொல்கிறோம். அதை வைத்து நாம் கிமு 600 ம் ஆண்டு என்று சொல்கிறோம்.
ஆனால் எழுத்து என்பது மொழி தோன்றி நீண்ட காலத்திற்குப் பிறகு வருவதுதான். ஒரு மொழி தோன்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்து வடிவம் கிடைக்கும். தமிழ் மொழிக்கு முன்பாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஒரு மொழி இருந்துள்ளது.
ஆனால் அதுவும் தமிழின் ஆதி மொழியாகத்தான் இருக்குமே தவிர, ஆகையால் அதனை தமிழுக்கு முந்தைய மொழி என்று சொல்கிறோம். தமிழ் வளர்வதற்கான முதல் கட்ட மொழியாக அது இருந்திருக்கிறது.
அதிலிருந்து தான் தமிழ் மொழியும் அதற்கான எழுத்துக்களும் வந்துள்ளது. அதை தான் இந்தியா முழுவதும் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறோம்.
மகாபாரதத்தில் இருந்த பொருட்கள் கிடைத்துள்ளதா என்ற கேள்விக்கு:
அது மகாபாரதத்தின் போது கிடைத்த தேர் அல்ல. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பிற்காலத்தில் செப்பு காலத்தில் கிடைத்த ஆதாரம். ஆரியர்கள் காலமாக இருக்காது ஏனென்றால் ஆரியர்களுக்கு புதைக்கும் பழக்கம் இல்லை அவர்களுக்கு முன்பான காலமாகத்தான் இருக்கும். அது ஒரு சமாதி தான் தேரை வைத்து சமாதி கட்டியிருக்கிறார்கள்.
குஜராத்தில் அகழாய்வில் ஆரஞ்சு நிறத்தில் கிடைத்துள்ளது மற்றும் (யமுனா சரஸ்வதி ) நதிகள் பெயரை வைத்து குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு:
அது கங்கை சமவெளியில் தான் கிடைக்கும். ஹரியானா பகுதியில் கூட கிடைக்காது. தற்போது பெயர் என்னவென்று என்றாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் முன்னாள் எப்படி அழைக்கப்பட்டது என்பது தான் முக்கியம். இன்று மாற்றி வைத்துக் கொண்டால் அது வரலாறில் மாறிவிடாது.
ஆரியர்களுக்கு முன்பாக தான் இந்த பகுதியில் பூர்வீக மக்கள் இருந்திருக்கிறார்கள்.
திருமலை நாயக்கர் குறித்த கேள்விக்கு:
தற்போது உள்ள திருமண நாயக்கர் மஹாலை ஒரு பகுதி தான். ஆனால் தற்போது அங்கு அகழாய்வு மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. பல முறை கட்டிடங்கள் அதிகமாகிவிட்டது.

நாகரிக வளர்ச்சியால் வரலாற்றுச் சின்னங்கள் அழிவு குறித்த கேள்விக்கு:
கண்டிப்பாக நம்முடைய முன்னேற்றத்தில் சில வரலாற்றுச் சின்னங்களை அழித்து விடுகிறோம். அதை அறியாமல் காப்பாற்றினால் அது வரலாற்றுச் சான்றுகளாக பிற்காலத்தில் இருக்கும்.
நிறைய மன்னர்களின் வரலாறுகள் தெரியாதது குறித்த கேள்விக்கு:
இந்தியாவில் வரலாறு சரியாக எழுதி வைக்கப்படவில்லை. எந்த மன்னர்களுக்குமே வாழ்ந்து மறைந்ததற்கான சான்றுகள் இல்லை. கிடைக்கின்ற சான்றுகளை வைத்து நாம் சொல்கிறோம். மேற்கத்தியவர்கள் ஒரு மன்னரின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக எழுதி வைத்துள்ளார்கள். நமது சான்றுகள் அளிக்கப்படவில்லை. எழுதி வைக்கப்படவில்லை. கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும்.
கீழடி ஆராய்ச்சி குறித்த கேள்விக்கு:
கீழடி மதுரையாக இருக்கலாம் அவ்வளவுதான். பணம் அதற்கான ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. தற்போது உள்ள கீழடியில் தான் மதுரை இருந்ததாக திருவிளையாடல் புராணம் 13ல் விளக்குகிறது. அதன் பிற்பாடு தான் கடம்பவனம் என்னும் காடாக இருந்த பகுதியை மாற்றி மதுரை எனும் நகர் உருவாகி இருக்கலாம்.
தொல்லியல் துறையில் உள்ள இடங்களை சுற்றுலாத் துறையாக மாற்றுவது குறித்த கேள்விக்கு:
மதுரையை சுற்றி தான் தொல்லியல் துறை இடங்கள் நிறைய உள்ளது.
மதுரையைச் சுற்றி மூன்று சமணர் படுகையில் உள்ளது. ஆற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
மதுரை பழமையான இடம் என்பதற்கு ஆதாரம் இல்லை ஆனால் மதுரையை சுற்றியுள்ள இடங்களில்தான் மதுரை பழமையானது நான் ஆதாரங்கள் உள்ளது.
காவிரி படுகைகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வது குறித்த கேள்விக்கு:
தொல்லியல் துறையில் அனைவரும் ஆர்வத்துடன் ஆய்வு மேற்கொண்டால் தான் செய்ய முடியும். தனி ஒரு நபரால் செய்கின்ற வேலை இல்லை. வைகை ஒரு சிறிய நதி என்பதால் எளிதாக கள ஆய்வு செய்து விட்டோம். காவிரியை முழுமையாக கர்நாடகாவில் இருந்து கள ஆய்வு செய்ய வேண்டும்.
சமணப் படுகைகளை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என இந்த மாநாட்டில் மூலம் நாங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம் என அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.