• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை கொடிசியா அருகே டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸின் டெல்டா சிட்டி எனும் புது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் துவக்கம்

BySeenu

Sep 6, 2024

கோயம்புத்தூரின் பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் நிறுவனமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் (TNCD). கொடிசியா – தண்ணீர் பந்தல் சாலைக்கு அருகில்  ‘டெல்டா சிட்டி’  எனும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை  இன்று துவக்கம் செய்தது.

இந்த திட்டத்தை TNCD நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், மூத்த துணைத் தலைவர் சுரேஷ்குமார், துணை பொது மேலாளர் – ப்ராஜெக்ட் ரத்தின மூர்த்தி, மார்க்கெட்டிங் துறை தலைவர்  ஜோஷ்வா ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 BHK (படுக்கையறை, ஹால், சமையலறை) ரூ. 30.99 லட்சத்துக்கும், 2 BHK ரூ.54 லட்சத்துக்கும் மற்றும் 3 BHK ரூ.74 லட்சத்துக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் EMI வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த குடியிருப்பு வளாகத்தில் வாஸ்து, கழிவுநீர் மேலாண்மை, மின்சார வாகன சார்ஜிங் வசதி, 24 மணிநேர CCTV கண்காணிப்பு, ஸ்மார்ட் ஹோம் அம்சங்கள், திறந்த உடற்பயிற்சி கூடம் போன்ற 15க்கும் அதிகமான சிறப்பு வசதிகள் உள்ளடங்கும் எனவும் TNCD நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் துவக்கத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில்  சுரேஷ் குமார் கூறியதாவது:-

எங்கள் டெல்டா சிட்டி  திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து மிக பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் 80 பிளாட்டுகள் உள்ளன. இவற்றில்  70%க்கும் அதிகமான பிளாட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்டா சிட்டியில் இருந்து கோவையின் முக்கிய  பகுதிகளான அவிநாசி ரோடு,  சத்தி ரோடு (தண்ணீர் பந்தல் வழியாக), டைடல் பார்க், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு விரைவில் செல்லமுடியும், என கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,  இந்த அடுக்குமாடி குடியிருப்பு ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பு என்று தெரிவித்தார்.