• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி கடல் பரப்பில் தீவிரவாதிகள் ஊடுருவலா.? இரண்டு நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும்,நாளையும்(செப்டம்பர்_4,5) தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் துவங்கியுள்ளது, அந்த வகையில் முதல் நாளான செப்டம்பர்.(04 )ம் தேதியான இன்று கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் 47 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம். இந்த சோதனையின் போது கடற்கரை மீனவ கிராமங்களில் சட்ட ஒழுங்கு காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.