• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!

Byஜெ.துரை

Aug 26, 2024

2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரின் கைவசம் ‘பிரம்ம முகூர்த்தம்’, ‘தரைப்படை’, ‘சாரா’, ‘பரபரப்பு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும், மரியாதைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்க தமிழ் சங்கம் இவரை சுதந்திர தினத்திற்கு வரவேற்று கவுரவித்துள்ளது.

குயின்ஸ், NY – ஆகஸ்ட் 2024 – நியூயார்க் தமிழ்ச் சங்க,தலைவர் கதிர்வேல் குமாரராஜா மற்றும் குயின்ஸ் இந்தியா தின அணிவகுப்புக் குழுவின் தலைவர் கோஷி ஓ தாமஸ் ஆகியோருடன் இணைந்து, குயின்ஸில் ஒரு அற்புதமான இந்திய தின அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் அமைப்புகள் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வு, துடிப்பான கலாச்சார காட்சிகள் மற்றும் வலுவான சமூக உணர்வுடன் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இதில் தமிழ் திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா கிராண்ட் மார்ஷலாக பணியாற்றினார்.

அணிவகுப்பை மரியாதையை ஏற்று மிகுந்த உற்சாகத்துடன் வழி நடத்தினார். அவருக்கு AMLWU நியூயார்க் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய தேசியக் கொடியுடன் அமெரிக்க கொடி பொருத்தப்பட்ட காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மரியாதை நிமித்தமாக சிறப்பு நினைவு பதக்கமும் வழங்கப்பட்டது .

அவரது வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்ததாக அமெரிக்க இந்தியர்கள் கூறினர்.

மேலும் இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் நம் இந்திய கலாச்சாரம் அமெரிக்கர்கள் கண்களை கவர்ந்தது.

அமெரிக்காவில் நடந்த விருது நிகழ்ச்சியில் இளம் பாரி என்கிற விருது விஜய் விஷ்வாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த விருது விழாவில் நடிகர்கள் சூரி,வைபவ்,மிர்ச்சி சிவா,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சுகன்யா,இயக்குனர் வெங்கட் பிரபு, அருண் வைத்தியநாதன் பிக் பாஸ் அர்ச்சனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இது மட்டுமின்றி அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் விஜய் விஷ்வா கலந்து கொண்டதோடு. இவருடன் சுதந்திர தினநிகழ்வில் பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி-யான நெப்போலியனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருடைய சிறப்பு அழைப்பை ஏற்று நடிகர் விஜய்விஷ்வா அவரது இல்லத்திற்கு சென்று விருந்தில் கலந்து கொண்டதோடு அவரது மகன் தனுஷ் விஷ்வா நடித்து வெளியான மாயந்தி படத்தை ஒடிடி கண்டுகளித்தார்.