• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

BySeenu

Aug 20, 2024

கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதரஸா அரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஜமாத் நிர்வாகத்தின் கடந்த வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வரும் ஆண்டுகளில் ஜமாத் மற்றும் மொஹல்லா வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இது குறித்து பள்ளி வாசல் நிர்வாகிகள் பேசுகையில், ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக மொஹல்லா வாசிகளின் நன்மை கருதி பல்வேறு பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த ஜமாத் மதரசா விரிவாக்கம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக பணிகளை சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தனர்.