பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற
சுதந்திரத் தினவிழாவில் ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசிய கொடி நிறத்திலான பலுான்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 374 பயனாளிகளுக்கு ரூ.3,.30கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் வண்ண மிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு , பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் .