• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் தான் முதல் புரமோஷன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிமாண்டி காலனி 2 டீம்.

BySeenu

Aug 9, 2024

கோவையில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அருள் நிதி,பிரியா பவானி சங்கர்,அர்ச்சனா,அருண் பாண்டியன் உள்ளிட்ட டிமாண்டி காலனி 2 படக்குழுவினர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015 ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி. திகிலான மேக்கிங்கில் கவனத்தை ஈர்த்த இதன் இரண்டாம் பாகம்,
7 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது. கோவையை சேர்ந்த பாபி பாலசந்திரன் தயாரிப்பில் முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க,அவருடன் அருண் பாண்டியன்,பிக் பாஸ் புகழ் அர்ச்சனா,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் புரமோஷன் நிகழ்வு கோவை புரோசோன் மாலில் நடைபெற்றது. இதில் ரசிகர்களின் முன்னிலையில் படக்குழுவினர் தோன்றியதோடு ரசிகர்ளின் கைகளில் மைக்குகளை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு அருள்நிதி,பிரியா பவானி சங்கர்,அருண் பாண்டியன் பிக் பாஸ் புகழ் அர்ச்சனா,மீனாட்சி ஆகியோர் பதில் அளித்தனர்.