மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சிவகங்கை மின் பகிர்மான வட்டக்கிளையின் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் எதிரே உள்ள தனியார் மஹாலில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திட்டத் தலைவர் சாத்தையா தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈட்டிய விடுப்பு ( SLS) பணமாக்கும் முறையை திரும்ப அளித்திட வேண்டும்,



புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் அழித்திட வேண்டும்,
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், 56000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்தி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுப்பிரமணியன்,ஆனந்த் செல்வன், காளிமுத்தன்,வீரசேகர்,மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்இன்று மாலை சுமார் 5 மணி வரை கலந்து கொண்டனர்.

