சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் வழிதடம் அமைப்பதற்காக
50 ஆண்டுகள் பழமையான 7 ஆழமரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை ரயில் நிலையம் உள்ளே எதிர்புறத்தில் பழமையான ஆல மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்றது பறவைகளின் தங்குமிடமாகவும் இந்த மரங்கள் இருந்து வந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் உள்ளே கூடுதலாக ஒரு ரயில் வழித்தடம் அமைக்க முடிவு செய்து இந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நடந்து வருகிறது. இன்று காலை முதல் ஏழு மரங்களையும் இயந்திரங்கள் கொண்டு வேரோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.


ரயில்நிலையத்தை விரிவு படுத்துவதாக சொல்லிக் கொண்டு பழமையான மரங்களை வெட்டிக்கொண்டிருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகள் பழமையான நல்லநிலையுள்ள காற்றையும், நிழலையும் தந்த மரங்களை வெட்டாமல் புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு யுத்திகளை கையாளும் இவ்வுலகில் மரங்களை மாற்று இடத்திற்கு மாற்றாமல் மரங்களை அடியோடு வெட்டிஅறுத்து எடுத்துச் செல்வது சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறனர்.


வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையால் வானுயர்ந்து பல ஆண்டுகளாக நின்ற மரங்கள் வேரோடு சாய்வது வேதனை அளிக்கிறது.

