தமிழக அரசிடம் இருந்து ரூ.12,000_00ம் கோடி நிதி வசூலிக்கும் பாஜக அரசு அண்மையில் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒன்றுமே ஒதுக்காததை கண்டித்தும். தமிழகத்தை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்த மண்ணிடம் காட்டும் ஓர வஞ்சனை செயலை கண்டித்தும், குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து. நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்னால் திமுக சார்பில் நடந்த கண்டன கூட்டத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநியுமான கம்பம் பெ. செல் நேந்திரன் தலைமையில் ஒன்றிய பாஜக அரசை மற்றும் பிரதமர் மோடி,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.

இந்த நிகழ்விற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்வில் பேசிய சிறப்பு விருந்தினர் கம்பம் பெ. செல்வேந்திரன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி எட்டு முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்த போதும் தமிழக மக்கள் மோடியை முற்றாக ஏற்றுக்கொள்ளாது. திமுகவின் தலைமையிலான இந்திய கூட்டணி போட்டியிட்ட 40_இடங்களிலும் மகாத்தானவெற்றியை தந்தனர்.தமிழகத்தின் புறக்கணிப்பை ஏற்று கொள்ள முடியாத தெய்வ பிறவி மோடிக்கு (இஸ்லாமித்தில் இறை தூதர்கள் உலகிற்கு 1124 _பேர் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்ற வாசகத்தை காணலாம்.)

பிரதமர் மோடி தன்னையும் 1125_வது இறை தூதர் என அவரே நினைத்துக் கொண்டாரோ என்னவோ என குறிபிட்ட செல்வேந்திரன் தொடர்ந்து அவரது பேச்சில். ஹரியானாவும், ஆந்திராவும் பிரதமர் நாற்காலிக்கு முட்டு கொடுத்து கவிழாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த நிலை வெகு நாட்கள் நீடிக்காது. மோடியின் கூட்டணி அரசு விரைவில் கவிழும். அந்த நாள் விரைவில் வரும் என மோடி அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் செல்வேந்திரன் அவரது உரையில் தெரிவித்தார்.
