• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள்…

ByNamakkal Anjaneyar

Jul 18, 2024

சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக இன்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து அதன் ஓட்டுனர் ராஜா ஓட்டி வரவே, வரும் பாதையில் பேருந்து பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்தில் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும் பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக வந்த பொழுது, பேருந்து குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான, சிவசக்தி நகர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, பேருந்தின் முன் சக்கரம் கழன்று சென்று அருகில் இருந்த கடைக்குள் விழுந்தது. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி கக்கியபடி வேகமாக வந்தது. பேருந்தின் ஓட்டுநர் ராஜா சாமர்த்தியமாக வாகனத்தை சாலையின் ஓரமாக திருப்பி நிறுத்தியதில் பெரும் விபத்து தரிக்கப்பட்டது. பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுனர் அரசு பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதோ பத்தி குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.