குமரி நாடாளுமன்றத் தொகுதி இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பதவியேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அருக்கு ஒவ்வொரு தொகுதி வாரியாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக குளச்சல் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் பீச்சந்திப்பில் மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் தலைமையில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் குமரி மாவட்ட விசைபடகு மற்றும் மீன்பிடிப்போர் நல சங்க வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் அவரது திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட தலைவர் கே. டி. உதயம், நகர தலைவர் சந்திரசேகர், திமுக நகர் மன்ற தலைவர் நசீர், மாநில பொது குழு உறுப்பினர் யூசுப்கான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், லாலின் மற்றும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உடன் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் . G.பிரின்ஸ் MLA அவர்கள், குமரி கிழக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே. டி. உதயம் குளச்சல் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர்,
குளச்சல் நகர்மன்ற சேர்மன் நசீர், மாநில பொது குழு உறுப்பினர் யூசுப்கான் மற்றும் ஜெயசிங், எட்வின்ஜோஸ், ஸ்டார்வின், ஜெனித், லாலின், சுவிட்டன், அமல்ராஜ் உட்பட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
குளச்சல் சட்டமன்றதொகுதி சார்பில் விஜய் வசந்த்க்கு உற்சாக வரவேற்பு








