• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…

BySeenu

Jul 5, 2024

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்..,

18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையுடன் முடிந்தது.

இந்த தேசம் 2047ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நெடுந்தொலைவு பார்வையோடு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த பாராளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளார்கள் என்ன நடைமுறையோ அதன்படி தான் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும், தமிழக எம்பிக்கள் நடந்து கொண்டதை ஓம் பிர்லா இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று சுட்டிக் காட்டியுள்ளார், இது குறித்து முறைப்படுத்துவதற்கு சபாநாயகர் சார்பில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அக்ரசிற்கு செல்வதற்கு வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வருவதற்கு வழி தெரியவில்லை, இதில் அரசியல் செய்யக்கூடாது தமிழகத்தில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் இங்கு வந்தும் அவர்கள் பார்வையிட வேண்டும். அவர்கள் இங்கு வருவதற்கு யார் தடுக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு ராகுல் காந்திக்கோ, மல்லிகார்ஜுன கார்கேவிகோ, முதலமைச்சர் ஸ்டாலினுக்கோ இதுவரை வழி தெரியாமல் இருக்கிறது. உடனடியாக ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என கூறினார்.

விக்கிரவாண்டி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய உத்வேகத்துடன் களத்தில் நிற்பதாக தெரிவித்தார்.

கள்ள சாராய விவகாரத்தில் அரசு அளித்த உதவித்தொகை குறித்தான கேள்விக்கு கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணமாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூட அது குறித்து பேசி இருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். ஸ்டாலின் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தமிழக இளைஞர்களின் காக்க வேண்டும் எனவும் கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் புழக்கம் தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் டாஸ்மாக்கை குறைப்போம் என்று கூறிய நிலையில் தற்பொழுது அதிகப்படுத்தி உள்ளார்கள் என தெரிவித்தார். இதையெல்லாம் குறைத்து விட்டு நல்ல பள்ளி கல்வி மாணவர்களுக்கு தேவையான யோகா இவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

எங்கள் தலைவர்களின் செயல்பாடுகளால் பாரதிய ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவை பற்றி அனைத்து தலைவர்களும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என கூறினார்.

நாடாளுமன்றத்தில் காரசார விவாதங்கள் எழுந்தது குறித்தான கேள்விக்கு எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதை பொறுக்காமலும் காங்கிரஸ் கட்சி ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். பிரதமர் செய்கின்ற ஆட்சிக்கு தடங்கள் ஏற்படுத்த வேண்டும் மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்கக்கூடிய செயலாக தான் இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.

சட்டத்தின் பெயர் மாற்றங்கள் குறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அது சமஸ்கிருதம் கிடையாது இந்தி கிடையாது உள்துறை அமைச்சர் அது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார் எனவும் தமிழிலும் அந்த பெயர்கள் மாற்றப்படும் என்பதை சொல்லி இருப்பதாகவும் பெயர் மட்டுமல்லாமல் சட்டத்தையும் தமிழாக்கம் செய்து கொடுக்கப்படும் என்று கூறியிருப்பதாக தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் இரட்டை ரயில் பாதை குறித்தான கேள்விக்கு, மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாட்டிற்கு மட்டுமே 50 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து ரயில் நிலையத்தை மேம்படுத்தி வருவதாகவும், இரட்டை ரயில் பாதையை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருப்பதாகவும் இது குறித்து ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பொது மக்களின் கோரிக்கையை கொடுத்து இருப்பதாகவும் உடனடியாக ஆய்வு செய்து இரட்டை ரயில் பாதை அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் ஜெயித்த ராசா தொகுதி பற்றியோ மக்களை பற்றியோ கவலை கொள்ளவில்லை எனவும் எந்த செயலும் செய்யவில்லை என்பதும் மக்களின் நீண்ட நாள் எண்ணமாக இருப்பதாகவும் இவற்றையெல்லாம் நிறைவேற்றும் விதமாக தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் கூட மக்களுக்காக அங்கிருந்து வேலை செய்வோம் என தெரிவித்தார்.