கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா ஆனந்தகுமார் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கணபதி பகுதியில் உள்ள 19-வது வார்டில் முதன்முறையா போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வான கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றார். இவர் கோவையின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மேயராக பணியாற்றி வந்த கல்பனா ஆனந்தகுமார் தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனிப்பட்ட காரணங்களுக்காக கல்பனா ஆனந்தகுமார் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறினார்.

ஏற்கனவே கல்பனா ஆனந்தகுமார் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
