• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு

BySeenu

Jun 20, 2024

கோவை ஆர்.எஸ்.புரம் ராவ் மருத்துவமனையில் பிங்க் வண்ணத்தில், அழகிய ரம்மியமான சூழலுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய மகப்பேறு பிரிவு துவங்கப்பட்டது.

கர்ப்ப கால நேரங்களில் பெண்கள் நல்ல உணவுகளை சாப்பிடுவதோடு, மகிழ்ச்சியான,ஆறுதலான தருணங்களில், ரம்மியமான சூழ்நலைகளில் இருப்பதால்,ஆரோக்கியமான குழந்தை பெற வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராவ் மருத்துவமனையில் கர்ப்ப கால தாய்மார்களுக்கு ரம்மியமான சூழலில் குழந்தையை பெற்றெடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன்,முழுவதும் குளிரூட்டப்பட்ட,லக்சுரி அமைப்புகளுடன் கூடிய மகப்பேறு பிரிவு பிரசவ அறை துவங்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஆஷா ராவ் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முருகாம்பாள் சுந்தரவடிவேலு,காயத்ரி நடராஜன், ஜஸ்மீத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பிரசவ அறையை துவக்கி வைத்தனர். புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த பிரிவு அழகான வண்ணங்களில், ரம்மியமான சூழலில், அதிநவீன வசதிகள் மற்றும் பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் அரவணைப்பு மற்றும் பாதுகாப்பை வெளிப்படுத்தும் சூழல் ஆகியவற்றை கொண்டுள்ள இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு முதல் தர வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் விதமாக இந்த பிரிவு செயல்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர். துவக்க விழாவில், மருத்துவர்கள் எஸ்.ஆர்.ராவ், தீபிகா ராவ், தாமோதர்ராவ், உட்பட மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.