• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி 54 வது பிறந்தநாள் விழா

ByNamakkal Anjaneyar

Jun 20, 2024

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா நாமக்கல் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்செங்கோடு விட்டம்பாளையம் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் மாநில பொது குழு உறுப்பினர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஜெப பிரார்த்தனை செய்த பிறகு கேக் வெட்டி ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவரும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்துரைகளை வழங்கினர். நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் வெட்னரிடாக்டர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் லோகநாதன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன்,தியாகராஜன், தேவனாங்குறிச்சி குணசேகரன், மகளிர் காங்கிரஸ் தேவி,திருச்செங்கோடு நகரத் தலைவர் செல்வகுமார், தொழிலாளர் காங்கிரஸ் பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், மோகன்ராஜ், பிரபாகரன், சசிகுமார், பெட்டம்பாளையம் முருகேசன், மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜலில், வர்த்தகப் பிரிவு தாமரைக்கண்ணன், கொக்கராயன் பேட்டை நசுருதின், எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் மயில்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் பராமரிக்கும் கரங்கள் இல்ல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்புடன் கூடிய இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி ஒருங்கிணைத்தார்.