நாகர்கோவில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசின் புறநகர் பேருந்தில் சீர் உடையுடன் பயணித்த காவலர் நடத்துனரிடம் பயண சீட்டு எடுக்க முடியாது என அதிகாரமாக வாதம் செய்தபோது. பணிக்கு செல்வதாக இருந்தால் வாரண்ட் தாருங்கள் என கேட்ட போது நான் அரசு பணியாளன் எனக்கு டிக்கெட் கிடையாது என நடத்துனரிடம் விவாதம் செய்து காலத்தை கடத்தியதால். பேரூந்தில் இருந்த மற்ற பயணிகள் காலதாமதம் ஆகிறது என குரல் எழுப்பிய பின்னும் பயண டிக்கெட் எடுக்க மாட்டேன் என விவாதம் செய்வதை காவலர் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருந்ததை பார்த்த ஒரு பயணி காவலரது டிக்கெட்க்கு பணம் கொடுத்தார். இதை பார்த்து கொண்டிருந்த பயணிகள் அணிந்திருக்கும் காவலர் சீருடை பணியை சம்பந்தப்பட்ட காவலர் அவமானம் படுத்துகிறார் என பேரூந்தில் இருந்த ஏனைய பயணிகளுக்கும் கேட்கும் விதத்தில் உரக்க சொன்னதை கேட்டு ஏளனமாக சிரித்தார்கள். நடத்துனர் அவரது பணியில் நேர்மையாக இருப்பதை பாராட்டினார்கள். சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி இத்தைகையவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் அந்த பேருந்து பயணிகள் மத்தியில் வெளிப்பட்ட உறையாடலாகவும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ளது.