• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறையினர் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

BySeenu

May 16, 2024

எந்த வித முறையான களஆய்வும், உள்ளூர் விவசாயிகளின் கலந்தாலோசனையும் இன்றி, தன்னிச்சையாக வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி,துணை தலைவர் கொங்கு பெரியசாமி ஆகியோர் பேசுகையில்,

தமிழக அரசு மற்றும் வனத்துறையும் யானை வழித்தடங்களை கண்டறிந்து வலசைப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்று 161 பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டதை விவசாயிகளும் மற்றும் மலைவாழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் விளம்பரங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் எவ்வாறு ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிடலாம் அந்த அறிக்கை மலைவாழ் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்படி புரியும் என கேள்வி எழுப்பினார்..

மேலும் 2024 ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தமிழகத்தில் சுமார் 42 வழித்தடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, போளுவம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வனசரக பகுதிகளுக்கு உட்பட்ட 520 ஏக்கர் மேல் உள்ள விவசாயி நிலங்களை யானை வழித்தடத்திற்காக கையகப்படுத்துவது ஒருதலை பட்சமாக வனத்துறையினர் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள 557 கிராமங்கள் உட்பட .கோவை மாவட்டத்தில் 57 கிராமங்கள் யானை வழித்தடமாக வனத்துறையினர் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் யானை வலசை பாதையில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் சுமார் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளது எனவும் வனப்பகுதியில் சொகுசு விடுதி, கல்வி நிறுவனம் போன்றவற்றை வனத்துறையினர் அகற்றாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறினார்..
மேலும் சுற்றறிக்கையை ஐந்து நாட்களில் படித்துவிட்டு பதில் கூற வேண்டும் என்று வனத்துறை கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.