கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தியது.
மேலும் கோவை மாநகர் பகுதியான முக்கிய பிரதான சாலையில் மழை நீர் வெள்ளம் போல் அபகரித்து ஓடியது. ஒருபுறம் கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மறுபுறம் கோவை குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போத்தனூர் சாலையில் மழை தண்ணீர் மற்றும் கழிவு நீர் சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கழிவு நீர் மழை நீருடன் சேர்ந்ததால் துர்நாற்றம் ஈசி அப்பகுதி பொதுமக்களை மிகவும் பாதிப்பு அடைய செய்துள்ளது. கழிவுநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகளவில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவு நீரை அகற்றி மழை நீர் வடிதல் பாதையை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.














; ?>)
; ?>)
; ?>)