• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரி மலைப்பாதையில் விபத்து

BySeenu

May 4, 2024

கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

சென்னை பகுதி சேர்ந்தவர்கள் 31 நபர்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து வாடகைக்கு மினி பேருந்து எடுத்து இரண்டு நாள் உதகைக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலா முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 16 பெரியோர்கள் மற்றும் 15 குழந்தைகள் என காயமடைந்தனர். உடனடியாக அவசர சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக 7 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.