• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் தற்காலிக கூரை

BySeenu

May 3, 2024

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாறும் வகையில் போக்குவரத்து சிக்னலில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 103 டிகிரி என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோவை நெடுஞ்சாலை கவுண்டம்பாளையம்-கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது. பச்சை நிற துணியால் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் சிக்னலில் நிற்கும் பொழுது அதிக அளவிலான வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலில் தற்போது மாநகராட்சி சார்பில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிழற்குடை இது என்னும் நிலையில் இதே போன்று அனைத்து சிக்னல்களிலும் அமைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.