• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி, தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

ByJeisriRam

Apr 25, 2024

சசிகலா பெயரை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள ரூ 5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தேனி முன்னாள் சேர்மன் ரத்தினம் அவர்களது மகள் ஜானகியம்மாள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

அதில் எங்களது தந்தை முன்னாள் தேனி சேர்மன் ரத்தினம் என்பவராவார். தற்போதுள்ள தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள இடங்களை அரசிற்கு தானமாக வழங்கியவர்.

பொதுமக்களுக்காக தேனியில் பிரதான இடத்தினை வழங்கி அவை சேர்மன் ரத்தினம் நகர் என்றழைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது குடும்ப சூழ்நிலையின் காரணமாக தனது தந்தையார் சுயமாக சம்பாதித்த பெரியகுளம் தென்கரை தெற்கு ரத வீதியில் ரூபாய் 5 கோடி மதிப்பிலான, டவுன் சர்வே எண் 4628/20ல் உள்ள 86 செண்ட் அளவில் உள்ள இடத்தினை அரசியல் பிரமுகர் சசிகலா அவர்களின் பெயரை பயன்படுத்தி அவரது உறவினர் எனக் கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து தங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் வைத்துள்ளனர்.

அவற்றை மீட்டு தரக் கோரியும் மேலும் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்ற கிளை மூலம் வழங்கப்பட்ட உத்தரவு நகலின் அடிப்படையில் நில அளவீடு செய்ய வந்த நில அளவையரை தடுத்தும்,அவர்களை வசை பாடியும் இடத்திற்குள் எங்களை நுழைய விடாமல் தடுத்தும் மீறி இடத்திற்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் முத்தையா மற்றும் அவரது வகையறாக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தினை மீட்டு தர வேண்டுமாய் புகார் மனு அளித்தனர்.