• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு

BySeenu

Mar 26, 2024

தனிப்பட்ட முறையில் என் தந்தை குறித்து தவறாக பேசியதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரது பேச்சால் தந்தையின் விசுவாசிகள், கட்சியினர் மனவேதனை அடைந்து இருப்பதாக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஜக இந்துத்துவா கட்சி – திமுக குடும்ப அரசியல் கட்சி – கோவை அதிமுக வேட்பாளர் விமர்சனம்

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை மக்களவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார், இது மன வருத்ததிற்குரிய செயல் எனவும், என் தந்தை கோவிந்தராஜன் இறக்கும் போது எனக்கு 11 வயது என தெரிவித்தார்.
நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்த அவர், அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்வதாக தெரிவித்தார். அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார், எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன் என தெரிவித்தார்.
அண்ணாமலை கீழ் தரமாக தவறாக இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது என தெரிவித்த அவர், எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம் எனவும், காரை விற்று கடனை அடைத்தோம் எனவும் தெரிவித்தார்.
பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம், இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர் எனவும், இதற்கு அண்ணாமலை கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்ணாமலை ஆக்க பூர்வமாக பேச வேண்டும் என தெரிவித்த அவர், அவரை தனிப்பட்ட முறையில் நான் எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
மறைத்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
கோவைக்கு திமுக எதுவும் செய்யவில்லை, மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என தெரிவித்தார்.
ஊழலை பற்றி பேச பா.ஜ.கவிற்கோ, அண்ணாமலைக்கோ,மோடிக்கோ தகுதியில்லை முக்கியமாக அண்ணாமலைக்கு தகுதி இல்லை எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலை செலவிற்கு எல்லாம் யார் காசு கொடுக்கின்றனர் என கேள்வி எழுப்பிய அவர், திமுக,பாஜக இரண்டும் ஒன்றுதான் எனக்கூறிய அவர்,
இந்தி தெரியாது போடா என சொல்லி விட்டு, கேலோ இந்தியா என்ற இந்தி வார்த்தையுடன் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு நடத்துகின்றார் எனவும் தெரிவித்தார்.
மோடியின் சாதனை கோவையில் என்ன இருக்கு என கேள்வி எழுப்பிய அவர்,
ரோடுஷோவில் கோவையின் பெருமையை பேச நிறைய இருக்கும் போது, குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி எதை நியாபகப்படுத்த பார்க்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.
திடீரென தேர்தலின் போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது என்பதன் மூலம், பழையனவற்றை நியாபம் செய்ய முயல்கின்றனர் எனக்கூறிய அவர்,
பா.ஜ.க தமிழகத்தில் வர முடியாமல் போனதிற்கு மனிதநேயம் காரணம் எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலை இந்த ஊர் கிடையாது, அவர் மாநில தலைவர் என்பதால் வெளியே சென்று விடுவார், கோவை மக்களின் பிரச்சினையை யார் பார்ப்பார் என கேள்வி எழுப்பிய அவர், கோவையில் திமுக , அதிமுகவிற்கு மட்டும்தான் போட்டி நடைபெற்று வருகின்றது , இங்கு மட்டும் அல்ல. பா.ஜ.க தமிழகத்தில் எங்கும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அரசு பதவியில் இருந்தால் மட்டும் திட்டங்களை வாங்கி கொடுப்பாரா? அண்ணாமலை என கேள்வி எழுப்பினார். கோவை மக்களவை தொகுதியில் 60 சதவீத வாக்குகளை பா.ஜ.க வாங்கினால் நான் அரசியலை விட்டு சென்று விடுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் தேர்வு அந்த கட்சியினரிடையே திருப்தி இல்லை எனக்கூறிய அவர், அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் படித்து இருப்பதாக பொய் சொல்கின்றார், புத்தகம் படித்ததாக பொய் சொல்லியதை போல என் தந்தை குறித்தும் பொய் சொல்லி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
இடத்திற்கு தகுந்தவாறு மாறி கொள்பவர் அண்ணாமலை என தெரிவித்த அவர்,
பா.ஜ.க 39 சீட் ஜெயித்தால் தமிழக அரசியலை விட்டே போய் விடுகின்றேன் என்றும் தெரிவித்தார். களநிலவரம் என்ன என்று தெரியாமல் பேசுகின்றார் அண்ணாமலை எனக்கூறிய அவர், தேர்தலுக்கு பின்பு வாக்கு பெட்டியை பாஜகவினர் மாத்தினாலும் மாத்துவாங்க என தெரிவித்த அவர், அதனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மையத்தின் வாசலில் உட்கார்ந்து இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
ஓவ்வொரு ஆண்டும் என்ன செய்வேன் என்பதை வெற்றி பெற்றால் நிச்சயம் பட்டியலிட்டு சொல்வேன் என தெரிவித்த அவர், அண்ணாமலை ஜென்டில்மேனாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார்.
தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சொல்பவர் அண்ணாமலை எனக்கூறிய அவர், அண்ணாமலை மச்சான் வைத்திருக்கும் குவாரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது, விசாரித்து பார்த்து கொள்ளுங்கள் எனவும் சிங்கை ராமச்சந்திரன் பேட்டியின் போது தெரிவித்தார்.