• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி.

BySeenu

Mar 22, 2024

வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி.

கோயம்புத்தூர், மார்ச் 21, 2024 – ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ஆர்சிசி சென்ரல் ஆகியவற்றுடன் இணைந்து, 16வது தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள் வீச்சு போட்டியை நடத்துகிறது. கோவை கே.பி.ஆர்., கல்லூரியில் 2024 மார்ச் 21 முதல் 23 வரை இப்போட்டி நடக்கிறது. கேபிஆர் நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, பி.சி.ஐ., துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், திட்ட தலைவர் ஏ.காட்வின் மரியா விசுவாசம் முன்னிலையில் போட்டியை மாவட்ட கவர்னர் நியமனம் செல்லா கே ராகவேந்திரா துவக்கி வைத்தார்.இதில் 200 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 120 ஆண்கள், 80 பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, வலிமை, உறுதி, திறமையை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டு வீரர்கள், பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை தேசிய அளவிற்கு முன்னேற்றியுள்ளனர்.
திட்ட தலைவர் மற்றும் ரோட்டராக்ட் மாவட்ட ஆலோசகர் ஏ காட்வின் மரியா விசுவாசம் கூறும்போது :- விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளின் திறனையும், ஊக்கத்தையும் வியந்து பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில்,

” இந்த போட்டியானது, சிறப்பாக செயல்பட கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் வாழ்க்கையில் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மாற்றுத்திறன் படைத்த தனிநபர்களின் திறனை மேம்படுத்தவதையும், இப்போட்டியை நடத்துவதையும் பெருமையாக கருதுகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை, சமத்துவத்தை இப்போட்டி முன்னுதரணமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் இந்த போட்டியானது, பிற விளையாட்டு போட்டிகளில் உள்ளோருக்கு தடைகளை தாண்ட ஆக்கமும் ஊக்கமும் தருவதாக இருக்கும்.ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், கடந்த 10 ஆண்டுகளாக கை பந்து, எறிபந்து போட்டிகளை நடத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு, தனியார் பங்களிப்புடன் ஒரு மைதானம் அமைக்க, முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமுதாயத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதுடன், அவர்களது வெற்றியையும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும். அவர்களது ஊக்கமும் உறுதியும் நமக்கு உத்வேகம் தருவாக இருக்கிறது. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் மாற்றங்களை உருவாக்க முடியும், என்றார்.இந்த நிகழ்வு, விளையாட்டு வீரர்களின் திறமையையும், உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விளையாட்டு மீதான ஆர்வத்தை பார்வையாளர்கள் வெளிப்படுத்துவதுடன், போட்டியையும் கண்டு பரவசமடைந்தனர். விருதுகளை பெற மட்டுமல்ல இந்த போட்டிகள், தடைகளையும், தடங்கல்களையும் உடைத்து முன்னேற வேண்டும், என்பதையும், உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆர்.சி.டி.,யின் தலைவர் மேகான்ராஜ், செயலாளர் குகன் ஆகியோர், அனைத்து ஆதரவாளர்களுக்கும், கேபிஆர் நிறுவனங்கள், ஆர்சிசி சென்ட்ரல், டிடி கோகுல்ராஜ், ஏஜி இளங்கோ, வி. வரதராஜன் மற்றும் வி.ஜி.எம். மருத்துவனைக்கும் நன்றி தெரிவித்தார்.கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் முதல்வர் சரவணன், ஏ.ஓ., சபரி, பி.சி.ஐ., முன்னாள் பொது செயலாளர் ஜே சந்திரசேகர், அர்ஜூனா விருது பெற்ற எம். மகாதேவா, டிஎன்பிவிஏ செயலாளர் ஆல்பர்ட், ஜி.எஸ் கர்நாடகா விளையாட்டு சங்கத்தின் ஆர்.மகேஷ்கவுடா, கிருபாகரன் ராஜா, டாக்டர் சரண், ஷர்மிளா, ஆர்.சி.சி., சென்ரல் தலைவர் அஸ்வின், ஆர்.சி.சி., சென்ட்ரல் செயலாளர் சுப்பு மற்றும் பிற முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.போட்டியின் நிறைவு விழா 2024 மார்ச் 24-ல், கே.பி.ஆர்., நிறுவனங்களின் வளாகத்தில் நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு பி.டிஜி ராஜசேகர், விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி கவுரவிக்கிறார். மேற்கண்ட விருந்தினர்கள் அனைவரும் நிறைவு விழாவிலும் பங்கேற்கின்றனர்.